For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதோ இதுதான் கள்ளக்காதலுக்கு கிடைத்த பரிசு.. காதலியை கொன்ற குற்றவாளி இளையராஜா சிறையில் தற்கொலை!

சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொன்ற குற்றவாளி இளையராஜா புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சிங்கா நல்லூர் பகுதியை சேர்ந்த நிவேதிதா, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணவனை இழந்த நிவேதிதாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் இளையராஜாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை விட்டு பிரிந்த நிவேதிததா இளையராஜாவுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் கணபதி என்பவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

மற்றொருவருடன் பழக்கம்

மற்றொருவருடன் பழக்கம்

இளையராஜாவுடன் உறவில் இருந்த சமயத்திலேயே கணபதியுடனும் நிவேதிதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நிவேதிதா,கணபதிக்கு பணம் கொடுத்து உதவியதால் அந்த பணத்தை வாங்குவதற்காக இளையராஜாவுடனேயே காரில் சென்னை வந்துள்ளார்.

வேறொருவருடன் பழக்கத்தால் கோபம்

வேறொருவருடன் பழக்கத்தால் கோபம்

சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகே கணபதிக்கும், நிவேதிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்து கணபதியை கார் ஏற்றிக் கொல்ல முயற்சித்த போது தவறுதலாக அதில் நிவேதிதா சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

கொல்ல திட்டம்

கொல்ல திட்டம்

ஆனால் நிவேதிதா கணபதியுடன் பேசிப்பழகுவது பிடிக்காமல் சென்னைக்கு புறப்படும் போதே இருவரையும் கொன்றுவிடும் திட்டத்தில் கிளம்பி வந்ததாகவும் ஆனால் கணபதி உயிர்தப்பி, நிவேதிதா மட்டும் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. முதலில் விபத்தாக கருதப்பட்ட ஆசிரியை நிவேதிதா வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்ட தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்கொலை முடிவு

தற்கொலை முடிவு

இந்நிலையில் காலையில் கழிவறைக்கு செனற இளையராஜா தான் அணிந்திருந்த லுங்கியை ஜன்னல் கம்பியில் கட்டி, தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி இளையராஜா உயிரிந்ததையடுத்து அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

English summary
Ilayaraja who killed teacher Niveditha over illegal relationship committed suicide in Puzhal prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X