For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அது சரி என்றால், இதுவும் சரி தான்' திமுகவை அதிரவைத்த முதல்வர் பழனிச்சாமியின் பதில்கள்

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை நீங்கள் கொண்டுவந்தால் சரி, நாங்கள் கொண்டுவந்ததால் தவறா என்று திமுகவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக உதயமாகி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று காலை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது உள்ளாட்சி தேர்தல் குறித்த மறைமுக தேர்தல் ஏன் என்பது குறித்தும் பேசினார். அந்த பதிலில் திமுகவை கடுமையாக சாடி கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் இன்றைக்கு நடைபெறுமா?, நடைபெறாதா? என ஒரு சந்தேகத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியபடி உள்ளார். தமிழகத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதற்கான ஆயத்தப்பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டே உள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்! பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்!

திமுக தான் அறிமுகம்

திமுக தான் அறிமுகம்

1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல் தான் தமிழ்நாட்டில் நடந்த வந்தது. 1996ல் (அப்போது) தி.மு.க. ஆட்சி வந்தபோது, மு.க.ஸ்டாலின் முதன் முதலாக நேரடி தேர்தலை சந்தித்தார் என்பதை அவர் மறந்து விட்டு பேசுகிறார். அதன்பிறகு மறைமுக தேர்தல் கொண்டு வந்ததும் அவரே தான். நீங்கள் தான் மறைமுக தேர்தல் அறிவித்தீர்கள். மறைமுக தேர்தலுக்கு சட்டசபையில் விளக்கம் கொடுத்தீர்கள்.

மக்கள் ஓட்டு

மக்கள் ஓட்டு

ஆனால் தற்போது ஏன் மறைமுக தேர்தலை சந்திக்க தயங்குறீங்க. மக்கள் ஓட்டு போட்ட பிறகு தான் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கவுன்சிலர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க போகிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது.

இதுவும் சரிதான்

இதுவும் சரிதான்

நீங்கள் (திமுக) கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால் தவறா?. தவறு என்றால் நீங்கள் 2006-ம் ஆண்டில் கொண்டு வந்ததும் தவறா?, தவறான திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தினீர்களா? அது சரி என்றால், இதுவும் சரி தான்" என பதில் அளித்தார்.

மறைமுக தேர்தல்

மறைமுக தேர்தல்

முன்னதாக ''தற்போதைய மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகார செயல்பாட்டுக்கு உதாரணம். 2006 இல் அப்போது இருந்த அரசியல் சூழலால் மறைமுக தேர்தலை நடத்தினோம். மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க அதிமுக அவசர சட்டத்தை கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

English summary
tamil nadu cm edappadi palanisamy said that first on dmk introduced indirect election in local body election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X