For Daily Alerts
Just In
ரூபாய் நோட்டு அறிவிப்பால் மீன் விலை கடும் உயர்வு.. அசைவ பிரியர்கள் கவலை
சென்னை: பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் காசிமேடு சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.இதனால் மக்கள் அன்றாட செலவுக்கே பணமின்றி திண்டாடி வருகின்றனர்.

மோடியின் இந்த ரூபாய் நோட்டு அறிவிப்பால் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் முடங்கியுள்ளது. நாட்டில் பெரும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூபாய் நோட்டு அறிவிப்பு மீன் விற்பனையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மீன்களின் விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.