For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்... தமிழக அமைச்சரவையில் இனி நம்பர் 2

முதல்வர் பழனிச்சாமி வசமிருந்த நிதித்துறை ஜெயக்குமார் வசமானது மீன்வளத்துறையுடன் கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித்துறை இலாகாவும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் இந்த பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த நிதித்துறை அமைச்சர் ஜெயகுமாருக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டம், ஊரக மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெய்குமார்க்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Fishery Minister Jayakumar additional Finance department

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் முதல்மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதல்வர் இலாக்காக்கள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் தாக்கல், ஜிஎஸ்டி மசோதா தொடர்பான கூட்டங்கள் உள்ள நிலையில் ஜெயக்குமார் இந்த பொறுப்பினை ஏற்றுள்ளார் இதன்மூலம் அமைச்சரவையில் நம்பர் 2 இடத்தை பிடித்துள்ளார் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Finance portfolio from Chief Minister Edapadi Palanisamy reallocated to Fisheries Minister D Jayakumar making him no. 2 in the Tamil Nadu cabinet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X