For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: அம்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், முத்தமிழ்நகர் மற்றும் மூகாம்பிகை நகரில் 500 வீடுகளை அகற்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Five persons tried to set up fire themselves in Chennai Ambattur

இதற்காக இன்று காலை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களுடன் வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் வீடுகளை இடிக்க கொண்டு வந்த ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

மேலும் குழந்தைகளுடன் 5 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தீக்குளித்த குணசேகரன் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Five persons tried to set up fire themselves for condemns to removeing their house in Chennai Ambatore Kallikuppam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X