For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயணிகள் கவனத்திற்கு.. பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல 5 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள்.. அரசு அறிவிப்பு

பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையின் போது மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் வருகிற 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து புறப்படும் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தாண்டு தீபாவளியின்போது சென்னையில் போக்குவரத்து நெரி சலை தவிர்ப்பதற்காகவும் பயணிக ளின் எளிதான பயணத்துக்காகவும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

Five temporary bus stands for pongal special buses

இதுபோல தைப்பொங்கலை முன்னிட்டு ஜன.11, 12, 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட் டுள்ளன. மக்கள், வாகன ஓட்டுநர்கள் இப்போக்குவரத்து மாற்றங்க ளுக்கு ஏற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

*செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

*கிழக்கு கடற்கரை சாலை வழி யாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் அடையாறு காந்திநகரில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

*திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்துகளும் (விரை வுப் பேருந்துகள் உட்பட) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (மெப்ஸ்) இருந்து புறப்படும்.

*பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ் ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்து கள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

மேற்கண்ட 4 தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்காக, ஜன. 11, 12, 13 ஆகிய தேதிகளில் செல்லும் வகையில் முன்பதிவு செய் துள்ளவர்களும், இத்தேதிகளில் இனிமேல் முன்பதிவு செய்பவர் களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள பேருந்து புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லா மல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் முன்பதிவின்போது தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணமாகும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து குறிப்பிட்ட பேருந்தில் பயணம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தேதிகளில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது பெரும் புதூர், செங்கல்பட்டு வழியாகச் சென்றால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லலாம். அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்புப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் கூடுதலாக, ஜன.11-ம் தேதி 794 சிறப்புப் பேருந்துகள், 12-ம் தேதி ஆயிரத்து 779 சிறப்புப் பேருந்துகள், 13-ம் தேதி ஆயிரத்து 872 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஒட்டு மொத்த 3 நாட்களிலும் 11 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படும்.

மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களும் மொத்தம் 6 ஆயிரத்து 423 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப் பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The State transport department has made special arrangements in Koyambedu bus stand for the passengers on Pongal festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X