For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளாஷ் பேக் 2016: புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ... ஜெயலலிதா- மறக்க முடியாத மரணங்கள்

2016ம் ஆண்டில் பிரபல முக்கியத் தலைவர்கள் மரணமடைந்தனர். பிரபலங்களின் மரணம் 2016ம் ஆண்டில் அவரது ஆதரவாளர்களிடையே மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புரட்சி நாயகன் என்று வர்ணிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ, புரட்சித்தலைவி என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தனர்.

பிரபல கவிஞர்கள், திரை உலக நட்சத்திரங்களும் 2016ம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு மறைந்தனர். அவர்கள் மறைந்தாலும் அவர்களின் புகழ் இந்த மண்ணுலகை விட்டு மறையாமல் இருக்கும் என்பது நிச்சயம்.

டிசம்பர் - 10

டிசம்பர் - 10

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான வி.சி. குழந்தைசாமி டிசம்பர் 10ம் தேதி தனது 87வது வயதில் காலமானார்.

டிசம்பர் - 7

டிசம்பர் - 7

துக்ளக் ஆசிரியரும், ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகருமான சோ. ராமசாமி டிசம்பர் 7ம் தேதி உடல்நலக்குறைவால் 82 வயதில் காலமானார்.

டிசம்பர்- 5

டிசம்பர்- 5

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, இதய முடக்கம் ஏற்பட்டு காலமானார். செப்டம்பர் 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, உடல் நலம் தேறி வந்ததாக கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

டிசம்பர் - 3

டிசம்பர் - 3

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் பிரபல கவிஞருமான பேக்கல் உட்சாஹி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பேக்கல் உட்சாஹி தனது 88வது வயதில் காலமானார்.

டிசம்பர் - 2

டிசம்பர் - 2

திமுக ஆட்சியில் உள்ளாட்சி, விவசாயம், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கோ.சி. மணி 87வது வயதில் காலமானார். திமுக முன்னோடிகளில் ஒருவரான இவர் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

டிசம்பர் - 1

டிசம்பர் - 1

மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். சிற்பி இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்து விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவருடைய 'நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனை சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.

நவம்பர் - 26

நவம்பர் - 26

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. டிசம்பர் 4ம் தேதி அவரது அஸ்தி சான்டியாகோ நகரில்
அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டது.

நவம்பர் - 22

நவம்பர் - 22

பிரபல கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா 86 வது வயதில் சென்னையில் காலமானார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்த பாலமுரளி கிருஷ்ணா, இசை உலகின் இமயம் தொட்டவர், நவம்பர் 22ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

நவம்பர் -7

நவம்பர் -7

காந்தியின் பேரனும் விஞ்ஞானியுமான கனு காந்தி 87வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

நவம்பர் - 5

நவம்பர் - 5

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரபல பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் உடல் நலக்குறைவால் காலமானார்

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

பிரபல இயக்குநர் வியாட்நாம் வீடு சுந்தரம் 73 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார், கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி ரத்த புற்றுநோயினால் 66வது வயதில் காலமானார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் என தமிழ் திரையுலகின் பழம்பெரும் பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாடகர் திருவுடையான் மரணம்

பாடகர் திருவுடையான் மரணம்

பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்தார். மக்கள் இசைப் பாடகரும், தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் பாடகர் சங்கை திருவுடையான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் இரவுப் பகலாக பாடியவர் திருவுடையான்.

ஆகஸ்ட் -14

ஆகஸ்ட் -14

பிரபல சினிமா திரைப்பட கவிஞர் நா. முத்துக்குமார் 41 வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூன் - 4

ஜூன் - 4

குத்துச்சண்டை உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் முகமது அலி ஜூன் 4ம் தேதி உடல் நலக்குறைவால் 74வது வயதில் மரணமடைந்தார். 61 முறை ஹெவிவெய்ட் குத்துச் சண்டை போட்டிகளில் களமிறங்கி அவர் அதில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதில் 37 முறை நாக்அவுட் முறையில் வென்றுள்ளார்

English summary
2016 has seen a host of some of our best-loved celebrities pass away.Jayalalithaa,Cho.Ramasamy were died in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X