For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி ஐ-போனை திருப்பியனுப்பி பிளிப்கார்டுக்கே 'பல்பு' கொடுத்த பலே ஊழியர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போலியான முகவரி மூலம் பிளிப்கார்ட் இணைதளத்தில் 12 ஐபோன்கள் வாங்கி, பின்னர் அவை சரியில்லை என கூறி போலியான ஐபோன்களை திரும்ப அனுப்பிய டெலிவரி மேனை போலீஸார் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் ஜி.என்.டி சாலையில் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பண்டக சாலை உள்ளது. இங்கு நவீன்(21) என்பவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியின் டெலிவரி மேனாக வேலை செய்து வந்தார். இவர் பிளிப்கார்ட் இணைததளத்தில் பல்வேறு போலி முகரிவயின் மூலம் 12 ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் டெல்லியில் இருந்து வரும் அந்த பேக்கிங்கை உடைத்து, அதில் இருந்த ஒரிஜினல் ஐபோனை எடுத்துவிட்டு, போலியான ஐபோனை வைத்துள்ளார்.

Flipkart delivery agent flicks 12 iPhones by defrauding employer

இதையடுத்து, போலி ஐபோன் எனகூறி வாடிக்கையாளர்கள் வாங்க மறுத்துவிட்டனர் எனகூறி மாதவரம் பண்டக சாலையில் திரும்பவும் ஒப்படைத்துள்ளார். இதனால், அவர்கள் அந்த ஐபோன் பார்சல்களை தங்களது டெல்லி தலைமையகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதை பெற்றுக்கொண்ட ப்ளிப்கார்டு தலைமை அலுவலகம், தாங்கள் பதிவேடுகளில் பதிவு செய்த தகவலைக் கொண்டு திரும்ப வந்துள்ள ஐபோன்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ப்ளிப்கார்ட் தலைமை அலுவலகத்தல் இருந்து சென்னைக்கு அனுப்பட்ட ஐபோனுக்கும், சென்னையில் இருந்து போலியானது என திரும்ப அனுப்பப்பட்ட ஐபோனுக்கும் வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது குறித்து மாதவரம் ப்ளிப்கார்ட் பண்டக சாலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பண்டக சாலையின் பொறுப்பாளர் வெற்றிசெல்வன்(30), மாதவரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

போலீஸார் நடத்தி விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை டெலிவரி மேன் நவீன், இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 12 ஆப்பிள் ஐபோன்கனை கைப்பற்றினர். பின்னர் நவீன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
A Chennai-based Flipkart delivery agent’s ingenious ploy to swindle iPhones by placing fake orders was thwarted on Sunday, by which time he had managed to get hold of as many as 12 iPhones by defrauding his own employer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X