For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆத்துல வெள்ளம்.. மது பிரியர்களுக்காக தென் பெண்ணையாற்றங்கரையில் டெம்பரவரி கடை + பார்!

தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குடிபிரியர்களின் வசதிக்காக ஆற்றங்கரையில் தற்காலிக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

கடலூர்: தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் புதுச்சேரிக்கு சென்று குடிக்க முடியாத குடிகாரர்களுக்கு வசதியாக ஆற்றங்கரைக்கே மதுக்கடை வந்துவிட்டது. இதனால் குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்து குடித்துக் குளித்தனர்.!

தமிழக அரசுக்கு மிகவும் வருமானம் வரும் தொழில்களில் ஒன்று டாஸ்மாக். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் மதுவிலக்கு தேவை என பல அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தினர். ஆனாலும் இருந்த கடைகளை விஸ்தரித்துக் கொண்டே போகிறது அரசு

இந்த மதுவிலக்கு கோரிக்கை என்பது கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அதிகமாக பாதிப்பை ஏற்பட்டது. மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம் செய்தன.

 படிப்படியாக அமல்

படிப்படியாக அமல்

ஆனால் ஜெயலலிதாவோ மதுவிலக்கை ஒரேடியாக கொண்டு வரமுடியாது. படிப்படியாக கொண்டு வரலாம் என்று அவரும் வாக்குறுதியை அளித்தார். பின்னர் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் முதல் முதலாக 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார் ஜெயலலிதா.

 உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதால் நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்கு உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

 மதுவிலை உயர்வு

மதுவிலை உயர்வு

கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சரவை கூடி மதுபானங்களின் விலையை உயர்த்தியது. இதனால் சைடு டிஸ், சரக்கு என செலவு கட்டுப்படியாகவில்லை. தென்பெண்ணையாற்றின் ஒரு கரை கடலூரிலும் மறுகரை புதுவையிலும் உள்ளது. புதுவையில் மதுபானத்தின் விலை குறைவு என்பதால் இரு கரைகளுக்கும் இடையே தாற்காலிக பாலம் அமைத்து குடிமகன்கள் ஜாலியாக குடித்து வந்தனர்.

 தென்பெண்ணையாற்றில் வெள்ளம்

தென்பெண்ணையாற்றில் வெள்ளம்

ஆங்காங்கே மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால் தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகமாக வந்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடிமகன்களால் தற்காலிக பாலத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த புதுவை மணல்மேட்டிலிருந்து சாராய வியாபாரி ஒருவர் தமிழக எல்லையில் தற்காலிக கடை அமைத்து மதுபிரியர்களின் ஆசையை நிறைவேற்றி வருகின்றார்.

English summary
Drunkers cannot pass through bridge to go for Pondy for buying liquors in least price. Because of flood in Thenpennai river results a temporary wine shop opnes in banks of the river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X