For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மக்கள் மகிழ்ச்சி!

ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டம் பாலாற்றில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வேலூர் மாவட்டம் புல்லூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Floods have occurred after 17 years in Palaru of Vellore district

தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பயணிக்கும் பாலாற்றில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு எற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் வாணியம்பாடி அருகே தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வெள்ளப்பெருக்கால் தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் மழையால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Floods have occurred after 17 years in Palaru of Vellore district due to heavy rains in Andhra Pradesh and karnataka. Due to this flood a bridge collapsed in Vaniyampadi. Two person have died in this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X