For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்குள் 'ஜனதா கட்சி' நடத்தும் சுப்பிரமணியன் சுவாமி

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் மதிமுக இடம்பெற சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாஜகவில் சேர்ந்தாலும் இன்னமும் அங்கும் 'ஜனதா கட்சி'யைதான் நடத்திக் கொண்டிருப்பதாகவே சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனங்கள் வெளிப்படுத்துகின்றன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக இம்முறை பாஜக வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஜக அணியில் தேமுதிக, மதிமுக, பாமக என அனைத்து கட்சிகளையும் சேர்ப்பதற்கான வியூகம் வகுத்து இயங்கி வருகிறது பாஜக.

இதில் மதிமுக, பாஜக அணியில் இடம்பெறுவது உறுதியான ஒன்றாகிவிட்டது. இரு கட்சி தலைவர்களும் பரஸ்பரம் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

கொந்தளித்த சுவாமி

கொந்தளித்த சுவாமி

இந்நிலையில்தான், பாஜக அணியில் மதிமுக, பாமக இடம்பெற்றால் அதிமுக 39 தொகுதிகளிலும் வென்றுவிடும் என்று கொந்தளித்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

கடுப்பான வைகோ

கடுப்பான வைகோ

இதற்கு வைகோவும் கடுப்பாக பதிலளித்துள்ளார். என்னது சுவாமி பாஜகவிலா இருக்கிறார்? என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.

பாஜக விளக்கம்

பாஜக விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியும் கூட சுவாமியின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளது. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஆசீர்வாதத்துடனேயே மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள்மேன்

சிங்கிள்மேன்

சுப்பிரமணியன் சுவாமியைப் பொறுத்தவரையில் தனி மனிதர்தான். அவர் ஜனதா கட்சியை நடத்தி வந்தாலும் அவரோடு சேர்த்து 3 அல்லது 4 பேர்தான் கட்சி என்ற நிலைமைதான்.. தொண்டர்கள் யாருமே இல்லாத ஒரு அரசியல் கட்சியைத்தான் சுவாமி நடத்தினார்.

பாஜகவில் இணைந்தாலும்..

பாஜகவில் இணைந்தாலும்..

அதையே தொடர்ந்து நடத்த முடியாமல் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் சுவாமி. அவர் பாஜகவில் சேர்ந்தாலும் தமிழக விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தே சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அடங்காத சுவாமி

அடங்காத சுவாமி

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாஜகவுக்கே தலைவர் போல 'வைகோவை சேர்க்கக் கூடாது என்று குரல் கொடுத்து வருகிறார். அதனால்தான், பாஜகவில் ஜனதா கட்சியை நடத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி என்று அக்கட்சியினரே சாடி வருகின்றனர்.

வைகோ நிலைமை.

வைகோ நிலைமை.

அதேபோல் வைகோவும் கூட இவ்வளவு விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு பாஜக அணியில் நீடித்தாக வேண்டிய ஒரு நிலைமையில் இருப்பது மிகவுமே பரிதாபகரமானதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Within days of the BJP striking a deal with the MDMK, its first in the south for the Lok Sabha elections, murmurs of dissent have surfaced with senior leader Subramanian Swamy on Sunday tweeting his displeasure over the alliance as well as the party's attempts to woo the PMK. Swamy's comments drew flak from the BJP's state unit leaders and MDMK chief Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X