For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாகன சோதனையில் ரூ.42 லட்சம் பணம் சிக்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

Flying squad seizes Rs.42.50 lakh

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில், திருவாணைக்காவல் கும்பகோணத்தான் சாலையில் இரண்டாவது தேர்தல் பறக்கும் படை அதிகாரி தர்மலிங்கம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது, ஒரு மாருதி காரில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துவரப்பட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த காரில் வந்த முரளி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சீர்காழியில் இருந்து வருவதாகவும், தான் சொந்தமாக நடத்தி வரும் இறால் பண்ணை தொடர்பாக பணத்தை எடுத்து வந்ததாகவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வசித்து வருவதாகவும் அவர் போலீசார் விசாரணையில் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரிவு அலுவலர் காதர் மொய்தீன், இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

English summary
In the first seizure consequent to the notification of the by-election to the Srirangam Assembly constituency, flying squad officials seized Rs.42.50 lakhs from a person travelling by a car in Srirangam on Tuesday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X