For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிகப் பெரிய கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது தமிழகத்தில் இதுவே முதல் முறை! #Moulivakkam

சென்னை மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றால் கட்டப்பட்ட 11 அடுக்குமாடி கட்டடம் இன்று தகர்க்கக்கப்பட்டது,

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டிய 11 அடுக்குமாடி கட்டடம் கடந்த 2014ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதில் கூலித் தொழிலாளர்கள் உட்பட 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த வளாகத்தில் இருந்த மற்றொரு கட்டத்தை இடிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து திருப்பூரை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று 11 அடுக்குகளை கொண்டு கம்பீரமாக நின்றிருந்த கட்டடத்தை 3 விநாடிகளில் தரை மட்டமாக்கியது.

For the First time the tallest building demolished in tamilnadu

தமிழகத்திலேயே இதுவரை இடிக்கப்பட்ட கட்டடங்களிலேயே இதுவே மிகப்பெரியது என கூறப்படுகிறது. இதற்கு முன்கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழும் நிலையில் இருக்கும் 2 ஆயிரத்து 500 பள்ளிக் கட்டடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக உயரமான கட்டடம் ஒன்று இடிக்கப்பட்டதால் மவுலிவாக்கம் பகுதி மக்கள் அதனை காண திரண்டிருந்தனர். அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சிகளும் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தன. ஆனால் கட்டடத்தை இடிப்பதில் தாமதமானதால் இருள் சூழ்ந்து கட்டடம் தகர்க்கப்படுவதை காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

English summary
for the first time in tamilnadu the tallest building demolished in ten seconds at mauliwakam chennai. huge people gathered there to see demolition of multi story building. media also had telecast from the evening to increase the TRP rate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X