For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கால்நடை மருத்துவ படிப்புக்கு 'நீட்' தேர்வு இல்லை - துணைவேந்தர் திலகர்

கால்நடை மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டுமோ என அச்சப்பட வேண்டாம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பான பிவிஎஸ்சிக்கு நீட் தேர்வு கிடையாது என கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலை துணைவேந்தர் திலகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு தேசிய பொதுநுழைவுத் தேர்வான நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவபடிப்பு என்றவுடன் அது கால்நடை மருத்துவ படிப்பான பிவிஎஸ்சிக்கும் பொருந்துமோ என்கிற சந்தேகம் மாணவர்களிடையேயும் அவர்களுடைய பெற்றோர்களிடையேயும் எழுந்துள்ளது.

For veterinary doctors NEET is not required said vice chancellor Thilagar

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் திலகர் கூறும்போது,'' கால்நடை மருத்துவ படிப்பான பிவிஎஸ்சிக்கு நீட் தேர்வு எழுதத் தேவையில்லை. இப்படிப்புக்கு ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண் அடிப்படையிலேயே சீட் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஆகையால் மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றார். மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்; அத்துடன் ஹார்ட் காப்பி எனப்படும் விண்ணப்ப தாளையும் அனுப்ப வேண்டும் என்றும் கூறினார்.

English summary
Tamilnadu stduets who are willing to apply for veterinary science need not afraid and they need not write NEET entrance exam told veterinary university vice chancellor Thilagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X