For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'போர்ப்ஸ்'.. உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன் உள்பட 2 தமிழ் பெண்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் உள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கல் முதல் இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் அரசியல், தொழில்துறை, கருணை உள்ளவர்கள் மற்றும் ஊடகங்களில் தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் சிறந்து விளங்குபவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

அந்த பட்டியலில் இதில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஏராளமான சிரியா அகதிகளுக்கு தன்னுடைய நாட்டில் இடம் அளித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி பிடித்துள்ளார்.

34வது இடத்தில்

34வது இடத்தில்

இந்த பட்டியலில் புதுமுகமாக இந்தியாவைச் சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்து இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஷிவ் நாடார் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார். ஹெச்.சி.எல் கார்ப்பரேஷின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

65வது இடத்தில்

65வது இடத்தில்

இந்தியாவில் கடின முயற்சியில் பணக்காரராக ஆன பெண்ணாகிய எம்.எஸ். மஜூம்தார்-ஷா- இந்த பட்டியலில் 65வது இடத்தில் உள்ளார். நாட்டின் மிகப்பெரிய உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் நிறுவனர் ஆவார்.

6வது இடத்தில்

6வது இடத்தில்

இந்த பட்டியலில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இணைத்தலைவர் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் (6)வது இடத்திலும், ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி (9) இடத்திலும், பேஸ்புக் சிஇஓ ஷெரில் சாண்ட்பெர் 19வது இடத்திலும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 38வது இடத்திலும் இருக்கிறார்

42வது இடத்தில்

42வது இடத்தில்

அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மகள் இவான்கா ட்ரம்ப் 42வது இடத்தை பிடித்தார். டென்னிஸ் வீராங்கணை செரினா வில்லியம்ஸ் 81 வது இடத்திலும் சூழியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் 100வது இடத்திலும் உள்ளார்.

English summary
Forbes most-powerful women list, FM Nirmala Sitharaman stands at 34th spot. German Chancellor Angela Merkel has topped Forbes' list of world's most-powerful women for the ninth year running.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X