• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்ட நாள் இன்று!

By Mathi
|

சென்னை: தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் கட்டற்ற ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்திய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 18.

1952-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி பிறந்த வீரப்பன் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று விநோதம்தான். 1972-ம் ஆண்டு சந்தன மரக் கடத்தலுக்காக முதன் முதலில் வீரப்பன் கைது செய்யப்படுகிறார்.

வீரப்பனை நாடறிய செய்தது தமிழக போலீஸ் அதிகாரி சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கொலை செய்த சம்பவம். அதேபோல் 1991-ல் சீனிவாஸ், ஹரிகிருஷ்ணா என அடுத்தடுத்த வனத்துறை அதிகாரிகள் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர்.

தமிழக, கர்நாடகா அதிரடிப்படைகள்

தமிழக, கர்நாடகா அதிரடிப்படைகள்

இதன்பின்னர் வீரப்பனை கைது செய்ய அதிரடிப்படையை அமைத்தது தமிழக அரசு. கர்நாடகா அரசும் வீரப்பனை பிடிக்க அதிரடிப்படையை உருவாக்கியது.

அதிரடிப்படை அட்டூழியம்

அதிரடிப்படை அட்டூழியம்

இரு மாநில அதிரடிப்படைகளும் கூட்டாக பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தேடுதல் வேட்டையை நடத்தின. இந்த தேடுதல் நடவடிக்கையில் அப்பாவி மலைவாழ் மக்கள் பலரும் நாசமாக்கப்பட்டனர். தமிழக வனத்துறையின் வரலாற்றில் கருப்பு அத்தியாயமாகிப் போன வாச்சத்தி பலாத்கார சம்பவமும் இந்த கால கட்டத்தில்தான் நிகழ்ந்தது.

வீரப்பன் கேசட்

வீரப்பன் கேசட்

ஆனால் வீரப்பன் சிக்கவே இல்லை. சந்தன மரக் கடத்தல், யானை தந்தம் கடத்தல் ஆகிய சட்டவிரோதங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரப்பன் ஆட் கடத்தல் எனும் அடுத்த படியையும் தொட்டார். தமக்கு வேண்டியது கிடைக்க அப்போது கடத்தப்பட்ட உறவினர்களுக்கு கேசட் மூலமாக நிபந்தனைகளை அனுப்புவது வீரப்பன் பாணி. தமக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பிணைக் கைதியை பாதுகாப்பாக அனுப்புவதும் வீரப்பன் பாணி.

தமிழ்த் தேசிய இயக்கங்கள்

தமிழ்த் தேசிய இயக்கங்கள்

தமிழகம், கர்நாடகா அரசுகளால் எட்ட முடியாத வீரப்பனை நக்கீரன் பத்திரிகை நேரில் சந்தித்தது. நக்கீரன் ஆசிரியர் கோபால், வீரப்பனை சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகள் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை கிளப்பின. ஒரு கட்டத்தில் தனித் தமிழ்நாடு கோரி ஆயுதம் ஏந்திய இயக்கங்களுக்கு வீரப்பன் அடைக்கலமும் கொடுத்தார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்

அப்போதுதான் கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினார். தமிழ்த் தேசிய கோரிக்கைகளுக்காக ராஜ்குமாரை கடத்தியதாகவும் அறிவித்தார் வீரப்பன். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ராஜ்குமார் கடத்தல் சம்பவம்.

ராஜ்குமாரை விடுவிக்க கோரிக்கைகள்

ராஜ்குமாரை விடுவிக்க கோரிக்கைகள்

108 நாட்கள் ராஜ்குமாரை தம் வசம் பிணைக் கைதியாக வைத்திருந்தார் வீரப்பன். முதலில் நக்கீரன் ஆசிரியர் கோபால், பின்னர் பழ. நெடுமாறன் தலைமையிலான குழு, கொளத்தூர் மணியின் முயற்சிகள் என ராஜ்குமாரை மீட்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமது சில கோரிக்கைகள் நிறைவேறிய நிலையில் ராஜ்குமாரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார் வீரப்பன்.

வீரப்பன் சுட்டுக் கொலை

வீரப்பன் சுட்டுக் கொலை

பின்னர் 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதியன்று வீரப்பனும் அவரது கூட்டாளிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் அறிவித்தார். வீரப்பன் சகாப்தம் முடித்துவைக்கப்பட்டதற்காக அதிரடிப்படையினருக்கு தமிழக அரசு பரிசுகளை அள்ளித் தந்து மகிழ்ச்சியடைந்தது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
The forest brigand Veerappan and three of his key associates, who were killed in an encounter Oct 18, 2004.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X