For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”கேபிடேஷன் பீஸ்லாம் வேண்டாம், நீங்க சேர்ந்தா போதும்”- மாணவர்களிடம் கெஞ்சும் பொறியியல் கல்லூரிகள்

Google Oneindia Tamil News

சென்னை:ஒரு காலத்தில் மக்களைப் பிடித்து ஆட்டியது என்ஜீனியரிங் கல்லூரி மோகம்.

அதனால், கவுன்சிலிங்கிற்கு முன்பே "கேபிடேஷன் பீஸ்" எனப்படும் முன்பணம் கொடுத்து சீட்டை பெறுபவர்கள்தான் அதிகமாக இருந்தனர்.

ஆனால், தற்போது கல்லூரிகளே இலவச இடங்களை தாமாகவே அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காலியாகும் இடங்கள்:

காலியாகும் இடங்கள்:

கிட்டதட்ட 1000 நிர்வாக இடங்களுக்கு மேலாக காலியாகவே இருக்கும் நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

கல்லூரிகள் போராட்டம்:

கல்லூரிகள் போராட்டம்:

இதனால், சிறந்த கல்லூரிகள் கூட மாணவர்களைப் பெறுவதற்கு போராட வேண்டி உள்ளது.மேலும், விளம்பரங்களும், மாணவர்களுக்கான சலுகைகளும் மட்டுமே புதிய மாணவர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நிலை உண்டாகியுள்ளது.

தலைக்கு 1000:

தலைக்கு 1000:

அதற்காக கல்வி நிறுவனங்கள் புதிய அஸ்திரங்களைக் கையில் எடுத்துள்ளன.அதன்படி தங்களுடைய ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் தலைக்கு 10000 ரூபாய் கொடுத்து தங்களது அருமை, பெருமைகளை விளம்பரப் படுத்தி வருகின்றன.

நிர்வாகம் தாராளம்:

நிர்வாகம் தாராளம்:

"எங்கள் நிர்வாகம் தற்போது 200க்கு 185 கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கும் மாணவர்களை சேர்த்து விட்டால் 15,000 ரூபாய் அளிக்கத்தயாராய் உள்ளது.மேலும், 160 முதல் 185 கட் ஆப் மதிப்பெண் வரை உள்ள மாணவர்களுக்கு 10,000 ரூபாய் அளிக்கப்படும்.

தவணைத் திட்டம்:

தவணைத் திட்டம்:

இது தவணைகளாக எங்களுக்கு வழங்கப்படும்.மேலும், அப்படிப்பட்ட மாணவர்களும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றைப் பெறுவார்கள்" என்று ஒரு பிரபல பொறியியல் கல்லூரியின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டண சலுகை:

கட்டண சலுகை:

ஏற்கனவே அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தும்.இரண்டாம், மூன்றாம், கடைசி வருடம் படிக்கும் மாணவர்கள், புதிய மாணவர்களைச் சேர்த்து விட்டால், இந்த பணமானது அவர்களுடைய அடுத்த வருட கட்டணத்தில் கழிக்கப்படும்.

கல்லூரியின் தரம் போதும்:

கல்லூரியின் தரம் போதும்:

"இது ஒரு அட்மிஷன் சூத்திரம்.அவர்களுடைய முழுக் கட்டணத்தைக் குறைத்தாலும் எங்களால் அதனை முழுமைப் படுத்திக் கொள்ள முடியும்"என்று ஈரோட்டின் ஒரு கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை அதிகாரி கூறியுள்ளார்.அவர்களுக்கு கிடைக்கும் மாணவர்களால் கல்லூரியின் தரம் உயர எதையும் செய்யத் தயாராக உள்ளனர்.

வேலை இல்லா நிலை:

வேலை இல்லா நிலை:

"எஞ்சினியரிங் மேல் உள்ள மோகம் பெருமளவில் குறைந்துவிட்டது.மேலும், போன வருடங்களில் எஞ்சினியரிங் முடித்த மாணவர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் மாணவர்களுக்கு பொறியியல் மோகம் குறைந்துவிட்டது.

மாறும் நிலைமை:

மாறும் நிலைமை:

அதனால், சென்னை மற்றும் கோயம்புத்தூர் கல்லூரிகளுக்கு கூட இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.

மாறும் நிலைமை:

மாறும் நிலைமை:

அதனால், சென்னை மற்றும் கோயம்புத்தூர் கல்லூரிகளுக்கு கூட இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.

English summary
Gone are the days when eager engineering aspirants surreptitiously approached colleges to pay capitation fee to book seats. Now the colleges are offering to pay faculty and students thousands of rupees to get students of their choice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X