For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று கூறிய கேசி பழனிச்சாமி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

அதிமுக செய்தி தொடர்பாளர் கேசி பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்பியுமான கேசி பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்பியுமான கேசி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Former ADMK MP and Partys spokes person KC Palanisami expelled from the party

இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கேசி பழனிச்சாமியை நீக்கி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் யாரும் கே.சி.பழனிசாமியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

English summary
Former ADMK MP and Party's spokes person KC Palanisami expelled from the party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X