For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் காலமானார்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் உடல்நலக்குறைவினால் இன்று சென்னையில் காலமானார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ். ரத்தினவேல் பாண்டியன் மறைந்தார்..கண்ணீர் விட்ட ஸ்டாலின், வைகோ- வீடியோ

    சென்னை: ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் ரத்தினவேல் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவினால் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 89.

    நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூரில் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்த ரத்தினவேல் பாண்டியன் வக்கீலாக பணியை தொடங்கியவர். வைகோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் குருவாக இருந்துள்ளார்.

    Former CJI Rathinavel Pandian passes away

    ரத்தினவேல் பாண்டியன் உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். 89 வயதாகும் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல் நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சென்னையில் காலமானார்.

    எஸ்.ரத்தினவேல் பாண்டியன், 'என் வாழ்க்கை பயணம்- ஏ டூ இசட்' என்ற சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தனது 89வது பிறந்தநாளை கொண்டாடினார் ரத்தினவேல் பாண்டியன்.

    Former CJI Rathinavel Pandian passes away

    ரத்தினவேல் பாண்டியனின் துணிவும், உறுதிப்பாடும், அவருடைய அனைத்து தீர்ப்புகளிலும் எதிரொலித்தது. தோல்விகளையும் படிக்கற்களாக அமைத்துக்கொண்ட ரத்தினவேல் பாண்டியன் மிக உயர்ந்த மனிதர் என்று பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

    English summary
    Former Chief Justice of India Justice S.Rathinavel Pandian died of a health illness on Chennai today, family sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X