For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி மணியின் உடல் தகனம்: மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ. சி. மணியின் உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அவரது சொந்த ஊரில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான கோ.சி. மணி நேற்றிரவு வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 87. கோ. சி. மணியின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

1929 செப்டம்பர் 13 ம் தேதி நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேக்கிரிமங்கலத்தில் கோவிந்தசாமி-அஞ்சலையம்மாளுக்கு பிறந்த கோசிமணியின் இயற்பெயர் சிவசுப்ரமணியனாகும், பிறகு கோசி மணியாக சுருக்கிக்கொண்டார். மணிக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி சாவித்திரி, இரண்டாவது மனைவி கிருஷ்ணவேணி, இவர்களுக்கு கோசி,மதியழகன், கோசி இளங்கோவன், புஸ்பா, தமிழரசி, அன்பழன். தனபால்,சின்னதுறை புகழேந்தி என 8 குழந்தைகள் பிறந்தனர்.

Former DMK Minister Ko.Si.Mani passes away today funeral

தமிழக அமைச்சரவையில், 1989 முதல் 1991 வரை தமிழக விவசாய அமைச்சராக இருந்தார். 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பிறகு கூட்டுறவு துறை அமைச்சராகவும் சிலகாலம் இருந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக நான்குமுறையும் .1968 முதல் 1980 வரை சட்டமேலவை உறுப்பினராகவும் தமிழக சட்டமேலவையில் எதிர்க்கட்சி துனைத்தலைவராகவும் இருந்துள்ளார். ஓய்வரியா சிங்கம், சின்னக்கலைஞர் என டெல்டா திமுகவினரால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

அவரது செல்லமகள் தமிழரசி, பிரியமான மனைவி கிருஷ்ணவேணி ஆகியோரின் மரணம் கோ.சி. மணியை மிகவும் பாதித்தது. 2009ம் ஆண்டு கோ.சி மணியின் மூத்தமகன் மதியழகன் இறந்ததும் குழந்தை நிலைமைக்கு வந்துட்டார். சாப்பாட்டில் துவங்கி அனைத்திற்கும் அடுத்தவரின் உதவியை நாடவேண்டிய நிலையானது.
உடம்பு முடியாமல் படுக்கை நிலைக்கு போனபோதும் கூட உதவியாளரின் உதவியோடு சென்று விடுவார்.

கடந்த ஒரு வார காலமாக அவரது உடம்பு உணவை எடுக்கவில்லை. அந்த நிலையில் திமுக தலைவர் கலைஞருக்கு உடம்பு முடியவில்லை என கலைஞர் டி,வி யை பார்த்தவருக்கு கண்கள் கலங்கிய நிலையில் உடல் அசைவற்று போனது. உடனே கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் 9.20 க்கு காலமானார்.

அவரது மறைவுச் செய்தி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மகன் கோசி,இளங்கோவன், கும்பகோணம் எம்,எல்,ஏ அன்பழகன், உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து கண்ணீர்விட்டு அழுதனர்.

அவரது உடல் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொருளாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்குப் பின்னர் கோ.சி. மணியின் உடல் அவரது சொந்த ஊரான ஆடுதுறையில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

English summary
Veteran Dravida Munnetra Kazhagam (DMK) leader and former Minister Ko.Si.Mani passed away here tonight after a prolonged illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X