For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடைப்பயிற்சியின்போது மாரடைப்பு.. ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தனபாலன் காலமானார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக ட்விட்டர் ஆர்மி ஆரம்பம் | ஹைகோர்ட் நீதிபதி வி.தனபாலன் காலமானார்- வீடியோ

    சென்னை: ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.தனபாலன் இன்று திங்கள்கிழமை காலை நடைபயிற்சியின்போது மாரடைப்பால் காலமானார்.

    சென்னை உயரி நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் நீதிபதி தனபாலன். இவர் நிலாங்கரையில் வசித்து வந்தார். வழங்கம் போல இன்று திங்கள்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றவர் அங்கே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே நீதிபதி தனபாலன் உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நீதிபதி தனபாலனின் இந்த திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Former high court judge V Dhanapalan no more

    சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற நீதிபதி தனபாலன் 1953 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செய்தூர் கிராமத்தில் பிறந்தவர். சீர்காழியில் பள்ளிப்படிப்பையும் மயிலாடுதுறையில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார்.

    பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2005 ஆம் ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சுமார் பத்தாண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய தனபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் போர்ட்ஃபோலியோவிலும் இருந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Former Madras high court judge V.Dhanapalan no more, while he went to walking on Monday morning heart attacked and died. He was serviced in Chennai high court as senior Judge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X