For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஜி அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் மாநகராட்சியில் போட்டி!

By Mathi
Google Oneindia Tamil News

திருப்பூர்: தமிழக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். சிட்டிங் மேயர்கள் 8 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

Former Minister Anandan contests in Tirupur Corporation election

அதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் திருப்பூர் மாவட்ட செயலருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சியின் 24-வது வார்டில் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா

2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆனந்தன் அமைச்சராக இருந்தார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றபோது ஆனந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் சட்டசபை தேர்தலில் ஆனந்தன் போட்டியிட வாய்ப்புத்தரப்படவில்லை. அதிமுக செல்வாக்குள்ள திருப்பூரில் அக்கட்சி வென்றால் ஆனந்தன் மேயராவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

English summary
ADMK announced that Former Minister Anandan contest in Tirupur Corporation election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X