For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி பெயர் நீக்கம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Former Minister KPP Samy name removed from voters list
சென்னை: வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி பெயர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வாக்காளர் வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தங்கள் பெயர் உள்ளதா? என பொதுமக்கள் சரிபார்த்து வருகின்றனர்.

5வது வார்டு கே.வி.கே.குப்பத்தில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது தம்பியும், 5வது வார்டு கவுன்சிலருமான கே.பி.சங்கர் ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் மட்டுமே இருந்தது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நானும் என் தம்பியும் வாக்களித்தோம். ஆனால் இப்போது எங்கள் இரண்டு பேரின் பெயரையும் யாரோ திட்டமிட்டு நீக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் பெயர் உள்ளதா? என்பதை கூட கவனிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன்" என்றும் கே.பி.பி சாமி கூறியுள்ளார்.

English summary
DMK Former Minister KPP Samy's name removed from the voters list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X