For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசார்ட்டிலிருந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள்.. கலெக்டரிடம் ஓம்சக்தி சேகர் மனு

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையில், சின்னவீராம்பட்டினம் ரிசார்ட்டில் தங்கியுள்ள 19 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியைவிட்டு வெளியேற்றுங்கள் என்று, புதுச்சேரி மாநில முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி ச

By Devarajan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: டிடிவி தினகரனின் 19 ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் ரிசார்ட்டிலிருந்து வெளி ஏற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில்," தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இரு அணிகளாகப் பிளவு பட்டது. இந்நிலையில் தற்போது முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி இணைந்துள்ளது. இதற்கிடையே டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Former MLA Om Sakthi Sekar asked collector to send all the Pro TTV Dinakaran MLA's from Pudhucherry

அந்த 19 எம்.எல்.ஏக்களும் கடத்தி வரப்பட்டு இங்கு வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமூகவிரோத சக்திகளின் தமிழக அரசைக் கலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து 19 எம்.எல்.ஏக்களும் இங்குத் தங்கி இருந்தால் புதுவையில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே அவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Puducherry Former MLA Om Sakthi Sekar urges to collector, send all the Pro TTV Dinakaran MLA's out of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X