For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் முதல்வராக பெரும் ஆதரவு... லயோலா மாஜி மாணவர்களின் கருத்துக் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் யார் அடுத்த முதல்வாராவார்கள் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 41 சதவீதம் பேர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

2வது இடம் ரஜினிகாந்த்துக்கும், 3வது ிடம் கமலாஹசனுக்கும், 4வது இடம் தினகரனுக்கும், 5வது இடம் அன்புமணி ராமதாஸுக்கும் கிடைத்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் சார்பில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

5874 பேரிடம்

5874 பேரிடம்

அந்த வரையில் சமீபத்தில் 5,874 பேரிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் வெளியிட்டார்.

யார் அடுத்த முதல்வர்

யார் அடுத்த முதல்வர்

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு, மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு 21 சதவீதம், கமல்ஹாசனுக்கு 13%, டி.டி.வி.தினகரனுக்கு 10%, டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு 7% ஆதரவு கிடைத்துள்ளது.

ஆளுநர் ஆட்சிக்கு வாய்ப்பு

ஆளுநர் ஆட்சிக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது வர வாய்ப்பு உள்ளது? என்ற கேள்விக்கு, சட்டசபை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக வாய்ப்புள்ளதாக 58.8% பேரும், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக 30.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்து திமுக ஆட்சி தான்

அடுத்து திமுக ஆட்சி தான்

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமையும் என்று 67 சதவீதம் பேரும், அதிமுக ஆட்சி என்று 15.4% பேரும், பாஜக ஆட்சி என்று 10.7% பேரும் கூறியுள்ளனர். பாமகவுக்கு இதில் 5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஆட்சியைக் கலைக்க ஆதரவு

ஆட்சியைக் கலைக்க ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரவேண்டுமா? அல்லது கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தவேண்டுமா? என்ற கேள்விக்கு, ஆட்சியை கலைக்கவேண்டும் என்று 68.2 சதவீதம் பேரும், பொதுதேர்தல் நடத்தவேண்டும் என்று 30.5 சதவீதம் பேரும், ஆட்சி தொடரவேண்டும் என்று 0.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு ஓட்டுப் போடுவோம்

திமுகவுக்கு ஓட்டுப் போடுவோம்

சட்டசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்பதற்கு, திமுகவுக்கு 54 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு 3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக - நாம் தமிழர்

பாமக - நாம் தமிழர்

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொய்வடைந்து போயக் கிடக்கும் விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு 1 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
A survey conducted by the former students of Chennai Loyola college has said that DMK will capture the power in the next poll with Stalin as CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X