For Quick Alerts
For Daily Alerts
Just In
எங்கள் சப்போர்ட் திமுகவிற்கே - பார்வர்ட் பிளாக் (சந்தானம்) அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு தங்களது முழுமையான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு எல்.சந்தானம் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் (தமிழ் மாநிலக் குழு) ஆதரவு தெரிவித்துள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் எல். சந்தானம் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இச்சந்திப்பின்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
மறுபக்கம் கதிரவன் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியின் இன்னொரு பிரிவு அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தகக்து.
Comments
tamilnadu assembly election 2016 dmk forward bloc party தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 சென்னை திமுக பார்வர்ட் பிளாக் கட்சி ஆதரவு
English summary
Forward bloc party support DMK in Coming assmebly election in Tamil Nadu.
Story first published: Thursday, March 24, 2016, 13:03 [IST]