For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றத்துக்கு டிச.10 முதல் 13-ம் தேதி வரை விடுமுறை

டிசம்பர் 10 -ம் தேதி முதல் 13-ம் தேதி நாடாளுமன்றம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு வரும் சனிக்கிழமை முதல் அடுத்த வாரம் செவ்வாக்கிழமை வரை 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டம் மக்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, தென் மாநிலங்களில் மிலாது நபி திருநாள் திங்கள்கிழமை அன்றே கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 Four day break for Lok Sabha

அதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கு வழக்கமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களும் விடுமுறை. இதனால், நாடாளுமன்றம் வரும் 10-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாள்கள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Dec 7 Lok Sabha will have a four-day holiday starting this weekend, with the Business Advisory Committee (BAC) today deciding to have a holiday on December 12, besides Tuesday which has already been declared a holiday on account of Eid-e-Milad-un Nabi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X