For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 வழிச்சாலை: கிருஷ்ணகிரி அருகே நில அளவீட்டுக்கு எதிர்ப்பு- ஆசிரியர் குடும்பத்தினர் 4 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை முயற்சி

    கிருஷ்ணகிரி: அத்திப்பாடி அருகே எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சேலம்- சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 277 கி.மீ., தொலைவிற்கு 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

    Four members arrested near in Kirshnagiri

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பாடியில் அரசு ஊழியர்கள் நில அளவீட்டு கல்லை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமலிங்கம் என்பவரின் நிலத்தை அளக்க அரசு ஊழியர்கள் முயன்றனர். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் நிலத்தை அளக்க விடாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராமலிங்கத்தின் 3 மகன்கள் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Four Members has been arrested near Kirshnagiri for opposing 8th way road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X