For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் 4 பேர் விடுதலை

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேரை விடுவித்துள்ளது டெல்லி போலீஸ்.

பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

 Four terror suspects released by Delhi police

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் சிறப்பு படை போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அ

வர்களிடமிருந்து அதி நவீன வெடி குண்டுகளும் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் டெல்லி சிறப்பு படை விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட 10 பேரில் நால்வரை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.

சரியான ஆதரங்கள் இல்லாததால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடத்த விசாரணைக்கு பின் டெல்லி போலீசார் விடுதலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட இந்த 4 பேரில் 3 பேர் கிழக்கு டெல்லியின் சந்த்பாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் காஸியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்தவர்.

English summary
The Delhi Police has released four terror suspects that it had detained last week. The Delhi police had claimed to have busted a major module of the Jaish-e-Mohammad and even stated that these persons were planning a Pathankot like attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X