செப். 22 இரவு ஜெ.யுடன் ஆம்புலன்சில் சென்ற அந்த மூவர் யார்?

சென்னை: கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் போயஸ் கார்டனுக்கு சென்றார்கள். அந்த மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என அழைப்பு வந்துள்ளது.

அப்போது இரவு 10.01 மணிக்கு அப்பல்லோவில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றது. அதில் சுரேஷ், சினேகா, அனிஷ் ஆகிய மூன்று மருத்துவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் ஜெயலலிதாவை பரிசோதித்த போது அவர் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் இல்லை. அவர்கள் பரிசோதித்த ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இல்லை.
ஆனால் உடல்வெப்ப நிலை மாறிக்கொண்டே இருந்துள்ளது. சர்க்கரை மிக அதிகமாக உயர்ந்து 508 மி.கிராம் அளவுக்கு சென்றுள்ளது என இந்த மூன்று மருத்துவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இதனை தற்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது.