For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பள்ளிகள் திறப்பு... தயார் நிலையில் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டுகள்

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சீருடை, பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றன. இதற்காக கோடை விடுமுறையின் போதே புத்தகங்களை அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

From Tomorrow School reopens after Summer Vacation in TN

அந்த வகையில் இந்த ஆண்டு வெயில் காரணமாக கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதலே அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 44 நாட்கள் விடுமுறை கிடைத்தன.

வெயில் இன்னும் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தற்போது அந்த விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் தொடங்குகின்றன. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ,மாணவியருக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுக்கள் ,வண்ண கிரையான்கள் , கலர் பென்சில்கள் தமிழக அரசின் சார்பில் நாளை பள்ளி திறந்த உடன் கொடுக்க தயார் நிலையில் உள்ளன.

English summary
From Tomorrow School reopens after Summer Vacation. Free text books and notebooks reaches school to distribute children on the first day itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X