For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு பேப்பருக்கு ரூ.10 ஆயிரம்.. ரூ.200 கோடி வரை லஞ்சம்.. அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்!

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 200 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலை ஊழல்! 10 பேராசிரியர்கள் மேல் வழக்கு- வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 200 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

    தமிழகத்தை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் உலுக்கி இருக்கிறது. இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

    ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

     யார் ஈடுபட்டது

    யார் ஈடுபட்டது

    அண்ணா பல்கலைக்கழக்த்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் கீழ் 100க்கும் அதிகமான பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் வேலை செய்பவர்கள்.

     எதை பயன்படுத்தி

    எதை பயன்படுத்தி

    2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அப்போது அண்ணா பல்கலையில் துணை வேந்தர் யாரும் இல்லாததை பயன்படுத்தி முறைகேடு நடந்து இருக்கிறது. அதே சமயம் இதில் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற தகவல் இப்போதுவரை வெளியாகவில்லை.

     எவ்வளவு வாங்கினார்கள்

    எவ்வளவு வாங்கினார்கள்

    ஒரு மாணவரை வெற்றிபெற செய்ய, அதிக மார்க் கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் வாங்கி இருக்கிறார்கள். மொத்தமாக மூன்று வருடத்தில் 2 லட்சம் மாணவர்களிடம் இப்படி பணம் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2014 இறுதி முதல் இப்போது 2018 வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பல ஆயிரம் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

     அதிர்ச்சி தகவல்

    அதிர்ச்சி தகவல்

    தற்போது போலீஸ் இதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது. இதில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் மொத்தம் 200 கோடி ரூபாய் வரை இதில் லஞ்சம் வாங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில உயர் அதிகாரிகளுக்கும் பணம் கைமாறி இருக்கிறது. இதனால் இந்த விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     தடை செய்தனர்

    தடை செய்தனர்

    அதேபோல் இந்த லஞ்ச விவகாரத்தில் ஒத்துழைக்காத ஆசிரியர்களை மறுகூட்டல் பணியில் இருந்தும் நீக்கி இருக்கிறார் பேராசிரியர் உமா. அவர்கள் பேச்சை கேட்கும் நபர்களை மட்டுமே வைத்து பணியை செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடான பேப்பர்களை எரித்து ஆதரங்களை அழிக்கவும் முயன்று இருக்கிறார்கள்.

    English summary
    Anna University Exam Bribe: Police registered the case against 10 professors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X