For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஜா புயல் நிவாரண பணிகள் செய்யவில்லை.. மணப்பாறையில் அதிகாரி மீது தாக்குதல்

Google Oneindia Tamil News

மணப்பாறை: கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு வந்த அதிகாரியின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், மரங்களை வெட்டி போட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். நடுரோட்டில் சமையல் செய்து சாப்பிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Gaja cyclone: Manapparai people beats government officer

மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறி, அந்த பகுதி மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் தொய்வு, குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும், பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை சமரசம் செய்ய வந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் மருதுதுரையை மறியலில் ஈடுபட்ட ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Manapparai people beats Government officer for not coming to the cyclone affected areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X