For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி எங்கே...?

Google Oneindia Tamil News

சென்னை: மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது அங்குள்ள ரயிலில் பயணம் செய்தபோது வெள்ளைக்கார போலீஸாரால் கீழே இறக்கி விடப்பட்டார். அந்த ரயில் பெட்டி சென்னையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதைக் காணவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனாவைச் சேர்ந்த பலராமன் என்பவர் சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் காரணமாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புகாரில்,பலராமன் கூறியுள்ளதாவது.

காந்தி பயணித்த ரயில் பெட்டி

காந்தி பயணித்த ரயில் பெட்டி

சென்னை ஐ.சி.எப். வளாகத்தில் மகாத்மாகாந்தி, பயணம் செய்த ரயில் பெட்டி கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

தென் ஆப்பிரிக்காவில் பயணித்தது

தென் ஆப்பிரிக்காவில் பயணித்தது

தென் ஆப்பரிக்காவில் காந்தி அடிகள் பயணம் செய்த அந்த ரயில் பெட்டி, ஒரு நினைவுச் சின்னம் போன்றது.

பெட்டியைக் காணவில்லை

பெட்டியைக் காணவில்லை

தற்போது அந்த ரயில் பெட்டியை காணவில்லை. அதை கண்டுபிடித்து, பழமை மாறாமல் புதுப்பித்து, காட்சிக்கு வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜோஹன்னஸ்பர்க் சம்பவம்

ஜோஹன்னஸ்பர்க் சம்பவம்

காந்தியடிகள் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு வந்திருந்தபோது முதல் ரயில் அனுபவமே அவருக்கு கசப்பாக அமைந்தது. 1893ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ஜோஹன்னஸ்பர்க் போவதற்காக அவர் ரயிலில் ஏறியபோது வெள்ளைக்கார போலீஸாரால் கீழே இறக்கி விடப்பட்டார். அப்போது அவர்பயணித்த முதல் வகுப்பு ரயில்பெட்டியைத்தான் தற்போது காணவில்லை என்கிறார்கள்.

English summary
A train compartment, in which Gandhiji travelled in South Africa has been allegedly missing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X