For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தியின் 149வது பிறந்தநாள்- சென்னையில் ஆளுநர்,ஈபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

மகாத்மா காந்தியடிகளின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மகாத்மா காந்தியடிகளின் 149வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மகாத்மா காந்தியடிகளின் 149-வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் தேசப்பிதாவாகப் போற்றப்படுகிறார்.

Gandhi jayanthi celebrated on the Marina

சென்னை மெரீனா கடற்கரையில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், அரசு அதிகாரிகள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில், தேசபக்தி பாடல்கள் பள்ளி மாணவ-மாணவிகளால் இசைக்கப்பட்டது.

நாட்டின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அஹிம்சை வழியில் நடத்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

English summary
On the birth anniversary of M. K. Gandhi function was held around his statue on Marina beach today morning.Governor, CM and Deputy CM paid floral tributes at Gandhi statue in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X