For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ஏமாறாதே ஏமாற்றாதே’ எம்ஜிஆர் பாடலைப் பாடி ஆர்.கே. நகரில் கங்கை அமரன் ஓட்டு வேட்டை

சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஜக வேட்பாளர் கங்கை அமரன். ஆர். கே. நகரில் எம்ஜிஆர் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் எம்ஜிஆர் பாடல்களை பாடி ஓட்டு வேட

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆர் பாட்டுப்பாடி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் கங்கை அமரன்.

தமிழக முதல்வராகவும் ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் அந்தத் தொகுதியில் நடைபெற உள்ளது. இதில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிஎம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களா வளம் வருகின்றனர்.

எம்ஜிஆர் பக்தர்கள்

எம்ஜிஆர் பக்தர்கள்

இந்தத் தொகுதியில் எம்ஜிஆர் பக்தர்கள் அதிகம். அதிமுகவிற்கு நீங்கள் ஓட்டுப் போவீடுர்களா என்று இந்தத் தொகுதி மக்களிடம் கேள்வி கேட்டால் அதுகெல்லாம் போடமாட்டோம்ங்க, ரெட்டை எலைக்குத்தான் போடுவோம் என்று சொல்லும் அளவிற்கு எம்ஜிஆரும் இரட்டை இலை சின்னமும் இங்கே பிரச்சித்தம்.

சூடு பறக்கும் பிரச்சாரம்

சூடு பறக்கும் பிரச்சாரம்

இந்நிலையில், பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரண்டு அணியினரும் இரட்டை இலையை பயன்படுத்த முடியாதபடி தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. அதனால் அதிமுக கட்சியின் நிறம், ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களை காட்டி, பிரச்சாரத்தில் இந்த இரண்டு அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்ஜிஆர் பாட்டு

எம்ஜிஆர் பாட்டு

இவற்றை எதனையும் பயன்படுத்த முடியாத பாஜக எம்ஜிஆர் பாடலைகளை பாடி வாக்காளர்களை கவரும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற எம்ஜிஆர் பாடலை கங்கை அமரன் பாடி வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

English summary
BJP’s R.K. Nagar candidate Gangai Amaran sings MGR songs in his election campaign in R K Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X