For Daily Alerts
Just In
கட்சியின் "உடல்நிலை" சரியில்லை- ஆம் ஆத்மியில் இருந்து விலகுகிறேன்: ஞாநி
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக எழுத்தாளர் ஞாநி தெரிவித்துள்ளார்.
அண்மையில் லோக்சபா தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக எழுத்தாளர் ஞாநி போட்டியிட்டார்.

அவர் மொத்தம் 5729 வாக்குகள் மட்டுமே வாங்கியும் இருந்தார். இந்நிலையில் தாம் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக ஞாநி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாநி எழுதியுள்ளதாவது:
கட்சியின் உடல்நிலையும் என் உடல்நிலையும் தற்போது சரியில்லாத காரணத்தால், நான் இன்று ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் நிலையிலிருந்து விலகிவிட்டேன்.
கட்சியில் சேரும் முன்னரே அதை ஆதரித்துப் பேசியும் எழுதி வந்தது போல, இனியும் தொடர்ந்து ஆதரிப்பேன்.
இவ்வாறு ஞாநி கூறியுள்ளார்.