For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரிச்சட்டி போல மாறி விட்ட வீடுகள்.. எங்கெங்கும் சாக்கடை.. இது வெள்ளத்திற்குப் பிந்தைய சென்னை!

Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளம் வந்தாலும் வந்தது சென்னை நொந்து நூடூல்ஸாகி விட்டது. வெள்ளம் வடிந்து நாட்களாகியும் கூட இன்னும் தேறவில்லை சென்னை. எங்கு பார்த்தாலும் குப்பையும், சாக்கடையுமாகத்தான் உள்ளது இன்னும்.

பல பகுதிகளில் இன்னும் கூட வெள்ள நீர் வடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய கொடுமையாக உள்ளது. அந்த வெள்ள நீர் தற்போது சாக்கடையாக மாறி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த சாக்கடை கலந்த மழை நீர் எப்போது வடியும் என்று தெரியாமல் மக்கள் கடுப்படைந்து காணப்படுகின்றனர்.

வீடுகளில் கருமை.. பூஞ்சை

வீடுகளில் கருமை.. பூஞ்சை

பெரும்பாலான வீடுகள் மழை நீரில் ஊறிப் போய் கருப்பு நிறத்திற்கு மாறி விட்டன சுவர்கள். சுவர்களில் ஈரப்பதம் இன்னும் போகாததால் பூஞ்சை பிடித்துக் காணப்படுகிறது.

தெருக்களில் துர்நாற்றம்

தெருக்களில் துர்நாற்றம்

பெரும்பாலான தெருக்களில் இன்னும் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. இதனால் சாக்கடை போல அவை காணப்படுகின்றன. கருப்பு நிறத்துடன் காணப்படும் அந்த நீரில் கொசுக்கள் குடித்தனம் செய்து வருகின்றன. நாற்றம் தாங்க முடியவில்லை.

பாவப்பட்ட ஏரியாக்கள்

பாவப்பட்ட ஏரியாக்கள்

திருவொற்றியூர் கார்கில் நகர், அன்னை சத்யா நகர், அம்பத்தூர், சூளை, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், தாம்பரம், அனகாபுத்தூர், முடிச்சூர், லட்சுமிபுரம், எருமையூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு தண்ணீர் இன்னும் குட்டை போல் தேங்கி கிடக்கிறது.

ராப்பகலாக வாரியிறைத்தும்

ராப்பகலாக வாரியிறைத்தும்

தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கோவிலம்பாக்கத்தில் 3 ராட்சச மோட்டார்கள் கடந்த சில நாட்களாக இரவு பகலாக இயக்கப்பட்டு தண்ணீரை அகற்ற முயன்ற போதும் இன்னும் தண்ணீர் வந்து கொண்டே உள்ளது, வடியவில்லை.

முழங்கால் அளவுக்கு தண்ணீர்

முழங்கால் அளவுக்கு தண்ணீர்

விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலை, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவு வெள்ளம் நிற்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து உள்ளது. இந்த பகுதிகள் சகதிகள் நிறைந்து வயல்வெளியில் நடப்பது போல் மக்கள் நடக்கிறார்கள்.

மலை போல குப்பைகள்

மலை போல குப்பைகள்

சாக்கடை தண்ணீரில் நடந்துதான் வீடுகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். லாரி லாரியாக குப்பைகளை அகற்றினாலும் ஓரிரு இடம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் பெரு வாரியான தெருக்களில் குப்பைகள் மலை போல் குவிந்து உள்ளன.

கொசுத் தொல்லை

கொசுத் தொல்லை

இப்பகுதிகளில் சுகாதாரக் கேடு தாங்க முடியவில்லை. இரவு கொசு தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள்.

English summary
Garbage and mosquito menace have made Chennai more worse than ever before. People are still under water in many areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X