For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு எதிராக காசு கொடுத்து டிவிட் செய்துள்ளார்கள்.. வேலையில்லாதவர்கள்.. காயத்திரி ரகுராம் சர்ச்சை

மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக்கில் காங்கிரஸ் கட்சியால் காசு கொடுத்து டிவிட் செய்யப்படுகிறது என்று தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் குற்றச்சாட்டு வைத

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு எதிராக பணம் கொடுத்து வேலை செய்கிறார்கள் - காயத்ரி ரகுராம்- வீடியோ

    சென்னை: மோடிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக்கில் காங்கிரஸ் கட்சியால் காசு கொடுத்து டிவிட் செய்யப்படுகிறது என்று தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.

    காயத்திரி ரகுராம்

    காயத்திரி ரகுராம்

    இந்த ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனதை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டினாலும் , பாஜக கட்சியினர் எதிர்த்துள்ளனர். முக்கியமாக தமிழ் சினிமாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் இந்த ஹேஷ்டேக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் எழுதும் மக்களை எல்லாம் அவர் கோபமாக திட்டி இருக்கிறார்.

    வன்மம்

    இந்த நிலையில் இதுபோன்ற ஹேஷ்டேக்குகளில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம் என்று காயத்திரி ரகுராம் டிவிட்டரில் எழுதியுள்ளார். இது ஒன்னும் அவ்வளவு முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அட போங்க

    இவர் அதற்கு ''இப்போதே 6 லட்சத்துக்கு 77 ஆயிரம் பேர் ''கோ பேக் மோடி'' ஹேஷ்டேக்கில் டிவீட் செய்து இருக்கிறார்கள். இன்னுமா இது முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என்று சொல்கிறீர்கள். கணிணி வைத்து எல்லாம் பொய்யாக இத்தனை புது புது டிவீட்டுகளை போட முடியாது'' என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.

    பதில்

    இதற்கு பதில் அளித்துள்ள காயத்திரி ரகுராம் ''இத்தனை டிவிட்டுகளும் காசு கொடுத்து காங்கிரஸ் கட்சி மூலம் ட் டிவிட் செய்யப்பட்டது. மக்கள் என்ன வேலையில்லாதவர்களா? வேலையில்லாதவர்கள்தான் அறிவில்லாத விஷயங்களுக்காக போராடுவார்கள். ஏன் மக்களை இப்படி திசை திருப்புகிறார்கள். '' என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

    English summary
    Gayathri Raguramm says that the hashtag GoBackModi has created by Congress sponsor. She says that ''67.7k bought and paid tweets trends by Congress. U think ppl r jobless? Only jobless protest against senseless things instead of #Cauvery #Sterlite or anything. Why sudden diversion?'' in twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X