For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலாற்றில் மணல் திருட்டு.... வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்: வீடியோ

வேலூர் மாவட்டம் வாலஜா அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்களின் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

வேலூர்: வாலஜா அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 16 வாகனங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் காவிரி, தாமிரபரணி, வைகை, பாலாறு உள்ளிட்ட பெரிய ஆறுகளின் கரைகளில் மட்டுமின்றி, சிற்றாறுகளின் கரைகளில் உள்ள மணலையும் அனுமதியின்றி எடுத்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனால் வெள்ள காலங்களில் ஆற்று நீர் கரையை தாண்டி ஊருக்குள் புகும் அபாயம் நிகழ்ந்து வருகிறது.

Geology and mineral department officials seized vehicles

இந்நிலையில் வாலஜா அருகே பாலாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தனர். இதுகுறித்து கனிமமவளத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு வந்த கனிமவளத்துறை அதிகாரிகள் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தையும் 16 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

சில நாட்களுக்கு முன்பு கரூர் அருகே காவிரி ஆற்றுப்படுகையில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மணல் திருட்டை முழுவதும் ஒழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Near Valaja Some people indulged in sand abduction and Geology and Minerals department official seized 16 vehicles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X