For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடு பாம்பே.. அட ஓடு பாம்பே.. நடுரோட்டில் ராத்திரியில் வாக்கிங் போன மலைப் பாம்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    நடுரோட்டில் ராத்திரியில் வாக்கிங் போன மலைப் பாம்பு!-வீடியோ

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெரிய சைஸ் மலைப்பாம்பு ஒன்று நடு ரோட்டில் கடந்து போனதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி அதை விரட்டி விட்டதால் அது உயிர் தப்பியது.

    ஓசூர்- கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வனவிலங்குகள், காட்டு யானை, மான், மயில் மற்றும் மலைப் பாம்புகள் உள்ளன.

    Giant snake crosses the NH near Soolagiri

    மலைப் பாம்புகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வது சகஜம். அதில் பல வாகனங்கள் ஏறி நசுங்கி இறந்து போவதும் சகஜமாகும். ஏகப்பட்ட மலைப் பாம்புகள் இது போல பரிதாபமாக இறந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு மேலுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையை 10 அடி நீளம் கொண்ட ஒரு மலைப் பாம்பு மெல்ல கடந்து வந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டனர். குச்சி, கட்டையை எடுத்து பாம்பை மெதுவாக சாலையை விட்டு விரட்டி விட்டனர். பாம்பும் சாலையைக் கடந்து இறங்கி போய் விட்டது. இதனால் அது உயிர் பிழைத்தது.

    [திருப்பூர் அருகே விபத்து: மலைவாழ் மக்கள் 5 பேர் பலி, சேமித்த காட்டுப்பொருட்களை விற்க சென்றபோது சோகம்]

    வண்டியை விட்டு ஏற்றாமல் நிறுத்தி பாம்பை விரட்டிய வாகன ஓட்டிகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். மலைப் பாம்புகள் இதுபோல இந்த சாலையில் அதிக அளவில் கடப்பதால் உயிரிழக்கும் நிலையைத் தவிர்க்க வனத்துறையினர் ஏதாவது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

    ராத்திரியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    A Giant sized snake crossed the NH yesterday night near Soolagiri. Vehicles were stopped and the drivers chased the snake to a safer area.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X