For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ. வளர்ப்பு மகன் வீட்டு திருமணத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இலவச கச்சேரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. வளர்ப்பு மகன் திருமணத்திற்கு கட்டப்பட்டிருந்த வாழை மரங்களின் தோரணம் மலைக்க வைத்தது. திருமண ஊர்வலத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே நிறத்தில் புடவை கட்டியதோடு அணிந்திருந்த நகைகளும், தமிழக மக்களையே உற்றுப் பார்க்க வைத்தது.

திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்பது நீதிமன்றத்தின் கேள்வி.

இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்த எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர் பவானி சிங் வாசிக்கும் முன்பாக, சென்னையைச் சேர்ந்த வருமான வரி இணை ஆணையர்கள் சீனிவாசன், சுப்பாராவ், சீத்தாராமன் ஆகியோர் அளித்த 76 பக்க வாக்குமூலத்தை வாசித்தார்.

1988 முதல் 1991-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு இடங்களில் வாங்கிய வீடு, பங்களா, தோட்டம், எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பாக தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை தேதி வாரியாக குறிப்பிட்டார்.

வளர்ப்பு மகன் திருமணம்

வளர்ப்பு மகன் திருமணம்

கடந்த 8.9.1995 அன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை பவானி சிங் வாசித்தார்.

சிவாஜி குடும்பம்

சிவாஜி குடும்பம்

"சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்" இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

சமையல் செலவு

சமையல் செலவு

தியாகராஜசுவாமி என்ற சமையல்காரர் கொடுத்துள்ள சாட்சியத்தில், வி.என்.சுதாகரன் திருமணத்துக்கு சமையல் செய்ததற்காக ரூ 11 ஆயிரம் கட்டணத் தொகையை காசோலை மூலம் பெற்றதை, படித்துக் காட்டினார்.

306 சொத்துக்களின் பட்டியல்

306 சொத்துக்களின் பட்டியல்

மே 9 ஆம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் சொத்துகளின் பட்டியலை 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு வாசிக்கத் தொடங்கினர். இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை என்றார்.

32 நிறுவனங்கள்

32 நிறுவனங்கள்

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்‌ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா – சந்தியா

ஜெயலலிதா – சந்தியா

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009, ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000, ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058. மேலும், அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

குவிக்கப்பட்ட சொத்துக்கள்

குவிக்கப்பட்ட சொத்துக்கள்

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060, ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கட சுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது.

கடைகள், ஷாப்பிங் மால்

கடைகள், ஷாப்பிங் மால்

சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530, சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை-4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904க்கு ஷாப்பிங் மால், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919, மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

திருச்சி, தஞ்சாவூரில் சொத்துக்கள்

திருச்சி, தஞ்சாவூரில் சொத்துக்கள்

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125, அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315, மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420, ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039, புதுக்கோட்டை 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371க்கும், டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000, வெலகாபுரம் கிராமத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

கட்டிடங்களின் மதிப்பு

கட்டிடங்களின் மதிப்பு

பையனூர் பங்களா ரூ.1,25,90,261, ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901, போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000, சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

வங்கி கணக்கில் பணம்

வங்கி கணக்கில் பணம்

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211, ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561, மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570 சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242, சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

30 கார்கள்

30 கார்கள்

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

பட்டுப்புடவைகள், செருப்புகள்

பட்டுப்புடவைகள், செருப்புகள்

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914 பட்டுப் புடவைகள் ரூ.61,13,700, மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870, 28 கிலோ தங்க நகைகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573'' என்று பவானிசிங் வாசித்து முடித்த போது நீதிமன்றத்தில் மிகப்பெரிய நிசப்தம் நிலவியது. நாளை சாட்சிகளிடம் நடைபெற்ற குறுக்கு விசாரணையும்... செலவு பட்டியலையும் பார்க்கலாம்.

English summary
Gifts given by associates of J Jayalalithaa to renowned music composer A R Rahman for a performance at a wedding in 1995 — when he was still a newcomer in the film and music industry — figure among key evidence being brought against the Tamil Nadu CM in the Rs 66.65 crore disproportionate assets case against her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X