For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நாள் மாநாடு.. ரூ. 2.4 லட்சம் கோடி முதலீடுகள்.. நிறுவனங்களின் முழு விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: 2 நாள் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதியில் ரூ. 2.4 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. இதை மிகப் பெரிய சாதனையாக அதிமுக அரசு கருதுகிறது. பெரும் தாமதம், விமர்சனங்களுக்கு நடந்தபோதிலும், இந்த மாநாடு அதிமுக அரசைப் பொறுத்தவரை, குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரிய சாதனையாகவே கருதப்புகிறது.

வரலாறு காணாத அளவுக்கு பெரும் முதலீடுகளை இந்த 2 நாள் மாநாடு ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த 3 நாட்களாக தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது கால்களை அகல விரித்து வியாபிக்கவுள்ளனர். இந்த நிறுவனங்களும், அவர்கள் எதில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்றும் எத்தனை கோடிகளை கொட்டப் போகிறார்கள் என்பதையும் பட்டியலாக வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

குவைத் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீடு

தனி நிறுவனமாக அதிகபட்ச முதலீட்டை செய்யும் பெருமை குவைத்தைச் சேர்ந்த அல் கராபி குழுமத்திற்குப் போய்ச் சேருகிறது. இந்த நிறுவனம் ரூ. 30,000 கோடியை எண்ணைய் துரப்பணப் பணிகள் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையில் முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் தனது நிறுவனத்தை நிர்மானிக்கவுள்ளது.

GIM effect: TN garner Rs 2.4 lakh cr investments

மின்துறையில் ஓபிஜி பவர் வென்ச்சர்

மின்துறையில் மிகப் பெரிய முதலீட்டை ஓபிஜி பவர் வென்ச்சர்ஸ் நிறுவனம் ரூ. 24,380 கோடியை கொட்டுகிறது.இது தனது அனல் மின் நிலையத்தை நாகப்பட்டனத்தில் அமைக்கிறது.

உபெர்

சென்னை மற்றும் கோவையில் உபெர் நிறுவனண் அடுத்த சில ஆண்டுகளில் 30,000 பேருக்கு வேலை கொடுக்கும் வகையில் தனது பிசினஸை விரிவுபடுத்தவுள்ளது.

சென்னையில் ஐடி பூங்கா

ஐடி துறையில், டபிள்யூ எஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சென்னையில் ஒரு ஐடி பூங்காவை ஆரம்பித்து 28,000 பேருக்கு வேலை தரவுள்ளது.

பாக்தாத்தின் திமா

பாக்தாத்தைச் சேர்ந்த திமா லங்கத் ஹோல்டிங்க்ஸ் நிறுவனண் தூத்துக்குடியில் ரூ. 12,600 கோடி முதலீட்டில் இறக்குமதி, சேமிப்பு மற்றும் உரப் பிரிவில் முதலீடு செய்யவுள்ளது.

English summary
2 day GIM has garnered Rs 2.4 lakh cr investments from various companies all over the world. Here is the full list of the companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X