For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாங்க வாசன் வாங்க... ராஜ்யசபா சீட்டு, மினிஸ்டர் போஸ்ட்டு.. எல்லாம் தர்றோம்.. பாஜகவின் 'ரெட்கார்பெட்'

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை பாஜகவில் சேர்க்கும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ்ஸை சேர்ப்பது, வாசனை வளைப்பது, திமுகவை மெகா கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பது என பாஜக படு மும்முரமாக களமிறங்கியுள்ளது.

தமிழகத்தில் பாஜக கால் வைக்கவே முடியாது என எதிர்க்கட்சிகள் உச்சஸ்தாயில் பிரசாரம் செய்கின்றன. ஆனால் திராவிட மண்ணில் காலை வைத்தே தீரும் என கனகச்சிதமாக காய் நகர்த்துகிறது பாஜக.

ஓபிஎஸ்- வாசன்

ஓபிஎஸ்- வாசன்

அதிமுகவை துண்டு துண்டாக சிதைத்த கையோடு ஓபிஎஸ்ஸை பாஜகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ஓபிஎஸ்-க்குதான் எங்களது ஆதரவு என மீண்டும் தமாகா தலைவர் வாசன் தெரிவித்திருக்கிறார்.

ராஜ்யசபா சீட்

ராஜ்யசபா சீட்

உண்மையில் வாசனின் ஆதரவு பேச்சு என்பது பாஜகவில் ஐக்கியமாவதற்கான க்ரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. வாசனைப் பொறுத்தவரையில் ராஜ்யசபா சீட் எங்கு கிடைக்கிறதோ அவர்களுடன் கை கோர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

எதையும் விடக்கூடாது

எதையும் விடக்கூடாது

தமிழகத்தில் நின்றுவிடுவதற்காக போராடும் பாஜகவோ கிடைக்கிற எந்த ஒருவாய்ப்பையும் நழுவ விடாமல் பார்த்து கொண்டிருக்கிறது. அதனால் ராஜ்யசபாசீட்டும் அமைச்சர் பதவியும் வாசனுக்கு தர முன்வந்துள்ளதாம் பாஜக.

திமுகவுக்கும் செக்

திமுகவுக்கும் செக்

அதேநேரத்தில் திமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது பாஜக. இதற்காகத்தான் சசிகலாவை ஆதரித்துவிட்டு திடீரென திமுகவுடன் கை கோர்க்கப் போன அதிமுக்கிய தலைவருக்கு குறிவைத்துவிட்டதாக செய்திகளை டெல்லி கசியவிட்டுள்ளது. தமிழகத்தில் தலைவர்களை வளைப்பதிலும் வதைப்பதிலும் மும்முரமாக இறங்கிவிட்டது பாஜக என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.

English summary
Sources said that GK Vasan will join BJP party very soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X