For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு.. 2017ல் அடுத்த மாநாடு: ஜெயலலிதா அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றும், அடுத்த மாநாடு 2017ல் நடைபெற உள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலாவது முதலீட்டாளர் மாநாடே பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.

Global investors meets to be held every 2 years: Jayalalitha

இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு, தொழிலதிபர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பை பயன்படுத்திக்கொள்ளும். இந்த தொடர்பை வலுப்படுத்தி, தொடர்ந்து முதலீட்டாளர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதற்காக 2 வருடங்களுக்கு ஒருமுறை, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தி்ல் நடத்தப்படும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த முதலீட்டாளர் மாநாடு 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என்பதையும் அறிவிக்கிறேன். இவ்வாறு பலத்த கைதட்டல்களுக்கு நடுவே ஜெயலலிதா அறிவித்தார்.

English summary
Global investors meets to be held every 2 years now on. The next meet will be held in 2017, CM Jayalalitha says in theTNGIM2015 valedictory function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X