For Daily Alerts
Just In
குருமூர்த்தி மக்களிடம் அம்பலமாவது நல்லது.. ஞானியின் கடைசி முகநூல் பதிவு!
சென்னை: மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞானியின் கடைசி முக நூல் பதிவு அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
ஞானி சங்கரன் இன்று காலை தனது சென்னை இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. ஞானி சங்கரன் தனது முக நூல் பக்கத்தில் போட்டுள்ள கடைசி பதிவு பல சிந்தனைகளை கிளறி விடுவதாக உள்ளது.

இதுதான் அது:
துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.
எத்தனை நிதர்சனமான உண்மை.
