For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு!

7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தித் தருவதற்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : 7வது ஊதியக்குழு பரிந்துரைப்டி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பத்ற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணைவெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி இனி குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூ.16,200 ஆகவும்,ஓய்வுபெறும் அரசு ஊழியருக்கான அதிகப்பட்ச ஓய்வூதியம் ரூ.1,12,500 இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 GO issued to increase the Pension for government employees

தமிழக முதல்வர் கடந்த 11ம் தேதி இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிப்பில் அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850/- என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500/-உயர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்வரின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக இன்று ஓய்வூதிய உயர்வு குறித்த அறிவிப்பு அரசாணையாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
GO issued to increase the Pension for government employees as per central government's seventh pay comission recommendation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X