For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலையில் ஒரு விலை.. மாலையில் டபுள்! தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது. முதல்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் விலையும் 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் தங்கம் விலை கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஒரு சவரன் ரூ. 30896க்கு விற்றது. அதன்பிறகு தொடர்ந்து ஏறுமுகத்தை சந்தித்து. தங்கம் விலை 13ம் தேதி ரூ.31112க்கும், 15ம் தேதி ரூ.31392க்கும் விற்பனையானது.

Gold price today: Yellow metal prices historical hike

17ம் தேதி சற்று குறைந்து ரூ. 31216க்கு விற்பனையானது. இந்நிலையில் 18 தேதியே அதிரடியாக உயர்ந்து 31408 விற்பனையானது. 19ம் தேதி அதற்கும் அதிகமாக அதாவது 312 ரூபாய் சவரனுக்கு உயர்ந்து ரூ.31720க்கு விற்பனையானது. 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.31824க்கு விற்பனையாது.

21ம் தேதியான இன்று காலை ஒரு சவரன் தங்கத்துக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32096க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.34 உயர்ந்து ரூ.4012க்கு விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை ஒரு கிராம் 4ஆயிரத்தை கடந்தது. ஒரு சவரன் 32 ஆயிரத்தை தாண்டியது.

காலையில் 272 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் மட்டும் 312 ரூபாய் உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் தங்கத்தின் விலை 584 ரூபாய் உயர்ந்து 32408க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ஒரே நாளில் 73 ரூபாய் உயர்ந்து 4051 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை போல் வெள்ளியின் விலையிலும் கடுமையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி ஒரு கிலோ பார் வெற்றி 49 ஆயிரத்து 400க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 52300க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு வாரத்தில் ரூ.2900 உயர்ந்துள்ளது.

English summary
Gold price today: Yellow metal prices historical hike. one gram 22k gold rs. 4012.00.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X