For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் விலை குறைவு... இந்த தீபாவளிக்கு ஆடைமட்டுமல்ல... மேட்ச் ஆக தங்கநகையும் தான்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தங்கம் விலை குறைஞ்சு போச்சாமே... அப்போ தீபாவளிக்கு 2 சவரன் செயின் வாங்கி கொடுங்க என்று கணவரை கேட்கத் தொடங்கிவிட்டனர் இல்லத்தரசிகள். தீபாவளிக்கு தங்கம் வாங்கினால் நிறைய பெருகுமாமே என்றும் கிளப்பி விடவே... ஒரு கிராம் தங்கமாவது வாங்கணும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

தீபாவளிக்கு புத்தம் புது ஆடைகள் வாங்க கடைக்குப் போகும் போதே அதற்கு மேட்ச் ஆக என்ன நகை வாங்கலாம் என்ற யோசனையோடுதான் போகின்றனர். ஆடைகள் மட்டுமல்ல... இதனால் ஆபரணங்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.

தங்கம் வாங்குங்க

தங்கம் வாங்குங்க

தங்கம் வாங்குவது இந்தியர்களின் கலாச்சார மற்றும் சமூக பழக்கவழக்கங்க ளுடன் தொடர்புடையதாக உள்ளன. அட்சய திருதியை போன்ற திருநாள்கள் தங்கம் வாங்குவதற்கு உகந்த மங்கல நாளாக கருதப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளில் தங்கம் வாங்குவதால் செழிப்பு ஏற்படுவதாக கருதப்படுகிறது.

தாந்த்ராஸ் பண்டிகை

தாந்த்ராஸ் பண்டிகை

நம் நாட்டில் தீபாவளிப் பண்டிகை வரும் 10ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் தாந்த்ராஸ் பண்டிகை நவம்பர் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது அன்றைய தினம் தங்க நகை வாங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

வட இந்தியர்கள் பண்டிகை

வட இந்தியர்கள் பண்டிகை

வட இந்தியாவில் மட்டுமல்ல வட இந்தியர்கள் அதிகம் உள்ள சென்னையிலும் தாந்த்ராஸ் பண்டிகையை முன்னிட்டு நகை விற்பனை களைகட்டியுள்ளது. தங்கத்தின் விலையும் குறைந்துள்ளதால் நகை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

கடந்த ஒருவாரமாகவே தங்கம் விலை தொடர்ந்து சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.184 குறைந்து, ஒரு பவுன் 19 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.82ம், பவுனுக்கு ரூ.656ம் சரிவடைந்துள்ளது.

குறைந்த தங்கம் விலை

குறைந்த தங்கம் விலை

கடந்த அக்டோபர் 8ம் தேதி தங்கம் விலை குறைந்து, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் சென்று, 19 ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், தங்கம் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த 25 நாட்களுக்கு பிறகு, செவ்வாய்கிழமை தங்கம் விலை மீண்டும் சரிந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

நகை வாங்க மகிழ்ச்சி

நகை வாங்க மகிழ்ச்சி

இந்த நிலையில் புதன்கிழமை மீண்டும் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 488க்கும், ஒரு பவுன் 19 ஆயிரத்து 904 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.அதன்படி, நேற்று கிராமுக்கு 23 ரூபாயும், பவுனுக்கு 184 ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ஆயிரத்து 465 ரூபாயாகவும், ஒரு பவுன் 19 ஆயிரத்து 720ரூபாயாகவும் விற்பனை ஆனது.

தீபாவளிக்கு நகைகள்

தீபாவளிக்கு நகைகள்

மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதாச்சாரத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு சரிந்து, தங்கம் விலை குறைந்து கொண்டே வருகிறது. தீபாவளி முடியும் வரை இதே சூழ்நிலை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கின்றனர் தங்க விற்பனையாளர்கள்.

மலிவு விலை தங்கம்

மலிவு விலை தங்கம்

தீபாவளி பண்டிகையின் போது அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயங்களை மத்திய அரசு விற்பனை செய்கிறது. இந்த தங்க நாணயங்கள் 5 கிராம், 10 கிராம் எடையில் இருக்கும். சந்தை விலையை விட இது குறைவான விலையில் வங்கிகள், தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது எனவே மக்களுக்கு இந்த வருஷ தீபாவளி தங்க தீபாவளிதான் போங்க!

பருப்பு, வெங்காயம்

பருப்பு, வெங்காயம்

தங்கமும், வெள்ளியும் விலை குறைஞ்சு என்ன செய்ய பருப்பும், வெங்காயமும் விலை குறைஞ்சாதானே எங்க தீபாவளி இனிப்பா இருக்கும் என்கின்றனர் நடுத்தர மற்றும் ஏழை இந்திய மக்கள்.

English summary
A silver lining in the form of lower gold prices this Dhanteras might be in the works for householders who have been signed by high dal and onion prices recently. Commodity futures market analysts till Wednesday evening have been betting on a fall in price around Dhanteras this Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X