For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனிமேல் ஏழை மணப்பெண்களுக்கு 8 கிராம் தாலி ஈஸியாக கிடைக்கும்.. ரூ.703.16 கோடி ஒதுக்கீடு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக ரூ.703.16 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது, அவர் கூறுகையில், தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கு ரூ703.16 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

Gold for Thali scheme: TN government released Rs.703.16 crores

முந்தைய ஜெயலலிதா ஆட்சியின்போது, 4 கிராம், அதாவது அரை பவுன் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு 8 கிராம், அதாவது ஒரு பவுனாக உயர்த்தப்படும் என்று, ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார்.

மீண்டும் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதும், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அதற்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஏழை பெண்கள் இனிமேல் 1 பவுன் தாலியை பெற முடியும்.

English summary
TN government released Rs.703.16 crores to give 8 grams of gold to bpl family brides.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X